மிகவும் சூட்சுமமான முறையில் பெண்களை தகாத முறையில் வீடியோ செய்த நபர் சிக்கினார்!
நிட்டம்புவ பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பெண்களை தகாத முறையில் வீடியோ செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசியை தனது பயணப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் இந்த செயலை செய்து வந்துள்ளார்.
கைத் தொலைபேசியை தனது பயணப் பையின் உட்பகுதியில் வைத்து, பையின் மேற்பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு, தொலைபேசியின் கெமராவைப் பயன்படுத்தி இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.