இனி வீதியை கடக்கும்போது கைத்தொலைபேசி பாவித்தால் என்ன தண்டனை தெரியுமா….?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மோண்ட்கிளர் நகரில் வீதியைக் கடக்கும் போது கைத் தொலைபேசிகளில் பேசியபடி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைத் தொலைபேசியைப் பயன்படுத்திய படி காதில் சாதனத்தைப் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டபடி குறுஞ்செய்தி போன்றவற்றை அனுப்பியபடி சாலையைக் கடப்பது சட்டவிரோதமான செயல் என அந்த மாநிலம் அறிவித்துள்ளது.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தடவை இத்தகைய குற்றத்தை செய்திருந்தால் 100 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 500 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் வேறு பல நகரங்களிலும் இந்த நடை முறைகள் அமுலிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.