ஒன்பது கல் மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.

வைரம்– வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும், அதாவது எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதை தெளிவாக்கி, அதிஷ்டத்தை அழைத்து வரும்.மாணிக்கம்- சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்று தர உதவுவதுடன், நம் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
மரகதம்– அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்.
புஷ்பராகம்– கண் பார்வையின் திறன் அதிகரிக்கும், திடீரென அதிர்ஷ்டங்களும் நம்மை தேடி வரும்.வைடூரியம்- எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை ஆகிய கோளாறுகள் வராமல் தடுத்து, எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும்.

பவளம்– வீரம் அதிகரிப்பதுடன், கட்டு மஸ்தான, கம்பீரமாக உடலின் அமைப்பை பெறலாம்.

முத்து– உடல் குளிர்ச்சி அடையும், மனம் தெளிவாகும்.நீலக்கல்- ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும்.

கோமேதகம்– உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

இத்தகைய ஒன்பது நவரத்தினக் கல்லினை கொண்ட ஒவ்வொரு ரத்தினத்திலும் ஒவ்வொரு பலன்கள் இருந்தாலும், இந்த நவரத்தின மோதிரத்தை அனைவரும் அணிந்து கொள்ள முடியாது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like