யாழ்.போராட்டத்தை அநாகரிகமாக அடக்கிய பொலிஸார்

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதான வீதியில் நேற்று நடத்திய போராட்டத்தை பொலிஸார் அநாகரிகமான முறையில் அடக்கி ஒடுக்கியுள்ளனர்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் பெருமளவில் பங்கு கொண்ட இப் போராட்டத்தினை முற்றுகையிட்ட ஆண் பொலிஸார் தாய் மார்களை தள்ளியும், இழுத்து கீழே விழுத்தியும் அநாகரிகமான முறையில் நடத்துந் கொண்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

யாழ்.புனித பத்திரியால் கல்லூரியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆய்வுகூடத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார்.

இதன் போது குறித்த பாடசாலைக்கு அண்மையாக உள்ள பிரதான வீதியில் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி வரும் வழியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பொலிஸாருடைய உத்தரவுக்கு அமைய வீதியோராமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனாதிபதி தம்மை சந்திப்பார் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வருகைதரும் போது வீதியோராமக நின்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இருப்பினும் நிகழ்வினை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்;ட ஜனாதிபதி போராட்டக் காரர்களை சந்திக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் காரர்கள் ஜனாதிபதி செல்லும் வழியினை மறிக்க முற்பட்டனர்.

இதன் போது போராட்டக் காரர்களை முற்றுகையிட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வீதிக்கு குறுக்காக வந்த போராட்டக் காரர்களை வீதியோரமாக தள்ளிரன்.

இருப்பினும் பொலிஸாரையும் மீறியும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் ஜனாதிபதியின் வாகனத்தை நோக்கி சென்ற போது, அவர்களை பொலிஸார் இழுத்து கீழே விடுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தாங்கிய பாதகைகைளும் பொலிஸார் கால்கழுக்குள் போட்டு மிதித்துக் கொண்டிருந்தனர்.
இவை அனைத்தையும் ஆண் பொலிஸாரே மேற்கொண்டிருந்தனர்.

ஆங்கு போதுமான பெண் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதும், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு பெண் பொலிஸார் வரவளைக்கப்படவில்லை. ஆண் பொலிஸாரே போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மார்களை தள்ளியும், இழுத்து கீழே விழுத்தியும் அநாகரிகமான முறையில் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் பல வாக்குவாதங்களும் நடைபெற்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like