யாழில் வெள்ளவாய்காலை தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த நபர் ஒருவர் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வெள்ளவாய்காலை அத்துமீறி தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த இந்த யாழ்ப்பாணத்தான் யார்?
ஐந்து சந்திக்கருகிலுள்ள மானிப்பாய் வீதி முதலாம் ஒழுங்கை வெள்ளவாய்க்கால் பகுதியே இவ்வாறு குறித்த நபரால் அடாத்தாக தகரவேலி அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகரசபை/பிரதேசசபை என்ன செய்கிறது? என்றும் இதனை கண்ணும் காணாதவர்கள்போல் உள்ளனரா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் பெய்த கடும் மழையினால் யாழ் மக்கள் பெரும் சிரமங்களுக்கு மௌகம் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இவ்வாறானவர்களின் செயல் பாடுகளே வெள்ளம் வழிந்தோடாமல் நின்றமைக்கும் காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.