தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். என பெற்றோர் பொலிஸின் விசாரனையின்போது தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாடங்களை ஒன்லைன் ஊடாக படிப்பதற்கே தொலைபேசி வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மாணவி புதிய தொலைபேசியில் ஒரு புதிய பேஸ்புக் கணக்கை ஒன்றை ஆரம்பித்திருந்தார்.அதன் ஊடகவே இன்னும் ஒரு மாணவனது முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் குறுந்தகவல் ஊடாகவே இருவருக்கும் காதல் நட்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அதன் பின்னர் மாணவி மகரகமையில் பிரத்தியோக வகுப்புக்குச் செல்வதாகக் பெற்றோருடன் கூறி கடந்த ஆகஸ்ட் 1ம் திகதி இருவரும் கந்தல பமுனுகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கி அம் மாணவியை வழுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்துள்ளார் அந்த மாணவன்.
அம் மாணவிக்கு வயது 15 மகரகம பிரதேசத்தில் வாழ்பவர். கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பவர் தற்பொழுது இம் மாணவி கர்ப்பம் தரித்துள்ளாள் அதன் பின்னர் மாணவி மாணவனுக்கு தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரவித்ததையடுத்து இருவரும் சன்டை பிடித்து பிரிந்துள்ளார்கள்.
அத்தோடு அம்மாணவன் குறித்த மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளான் மாணவியின் குடும்பத்தாருக்குமிடையில் இவ்விடயம் தெரியவந்ததையடுத்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் இரு மாணவர்களது பெற்றோர்களும் மகரகம பொலிஸ் முறைப்பாடு செய்ததையடுத்து தற்பொழுது மாணவன் மகரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மேலதிக விசாரணையை மகரகம குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரி திரு.ஜானக்க விசாரணையை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.