பொலிசார் தம்மை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு சந்தேகநபர்களால் மன்றின் கொண்டு வரப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் நீதிவான நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

சந்தேகநபர்கள் இருவருக்கு எதிரான களவு குற்றச்சாட்டு வழக்கு இன்று மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று விளக்கத்துக்கு எடுக்கப்பட்டது.

அதன்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தம்மை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு பயமுறுத்துவதாக சந்தேகநபர்களால் மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரை சந்தேகநபர்களுடைய வாக்குமூலத்தை பெற்று மேல் நடவடிக்கைக்காக மூத்த பொலிஸ் அத்தியட்சருக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like