பாம்பு பிடிப்பதில் புகழ்பெற்ற மலேஷிய தீயணைப்பு வீரர் நாக பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்

ஆபத்­தான பாம்­பு­களைப் பிடித்துப் பிர­ப­ல­மான மலே­ஷிய தீய­ணைப்பு வீரர் ஒருவர், நாக பாம்பு கடித்த நிலையில் உயி­ரிழந்­துள்ளார்.

33 வய­தான அபு ஸரின் ஹுஸைன் என்ற இத்­தீ­ய­ணைப்பு வீரர், பாம்­பு­க­ளுடன் நெருங்கிப் பழ­கி­யவர். பாம்­பு­களை தான் முத்­த­மிடும் பல புகைப்­ப­டங்கள், வீடி­யோக்­களை அவர் வெளி­யிட்­டி­ருந்தார். இப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வின.
அண்­மையில் இவர் மலே­ஷி­யாவின் மத்­திய பிராந்­திய மாநி­ல­மான பஹாங்கில் நல்ல பாம்­பொன்று அபு ஸரின் ஹுஸைனை கடித்­தது. இதை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அபு ஸரின் ஹுஸைன், 4 தினங்­களின் பின் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயி­ரி­ழந்தார்.
கட­மையில் இல்­லாத வேளையில் தனது மனை­வி­யுடன் அபு ஸரின் ஹுஸைன் இருந்­த­போது பாம்­பொன்றை பிடிக்க வரு­மாறு அவ­ருக்கு அவ­சர அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தாகவும், அதன்பின் மேற்­படி நாக பாம்பை பிடிக்க முயற்­சித்­த­போது அது கடித்­த­தா­கவும் கோலா­லம்பூர் தீய­ணைப்பு மற்றும் மீட்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிதின் த்ரஹ்மன் தெரிவித்துள்ளார்.