மாற்றிய மைத்திரி: திட்டித் தீர்த்த மக்கள் (வீடியோ)

யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், நேற்று (19) காலை 8.30 மணியளவில் இந்த போராட்டம் யாழ்.பிரதான வீதி சென் சார்ள் வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியில் நடைபெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, பாதர் பிரான்சிஸ் யோசப் உட்பட பல உறவுகள் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் தமது உறவுகளினால் கையளிக்கப்பட்டிருந்தனர். 
ஆவ்வாறு கையளிக்கப்பட்ட உறவுகள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது, நடைபெற்ற விசாரணைக்குழுக்களின் முடிவு எங்கே? துமிழ் பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கைபொம்மைகளா? இன்னும் கால அவகாசம் தேவையா? 2009-2018 தீர்வு எங்கே? துமிழரை ஏமாற்றாதே! இலங்கை அரசே ஐ.நா சபையை ஏமாற்றாதே? ஓ.எம்.பி. விசாரணைக்குழு எதற்கு? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஜனாதிபதியின் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடாத்தினார்கள். 
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை சந்திக்க முற்பட்ட வேளையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தடுத்தி நிறுத்தியதுடன், போராட்டக்காரர்களை போராட்ட இடத்தில் இருந்து நகரவிடவில்லை. 
ஆர்ப்பாட்டம் நடைபெற்றஇடத்திற்கு ஜனாதிபதி செல்லாது, நிகழ்வில் கலந்துகொண்டமையினால், ஆர்ப்பாட்டக்காரர்கள் சலிப்படைந்தும், தமது போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்திருந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like