இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் (வீடியோ)

இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமலாக்கப்பட்வர்களின் உறவினர்களின் போரட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தினை இன்று முன்னெடுத்தனர்

யாழ் மாட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இவர்ள் கூட்டமைப்பினருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்

தமது பிள்ளைகளின் நிலமைகள் தொடர்பில் அக்கறையில்லாமல் பதவி சுகபோகங்களை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர் உடனடியாக தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்

விரைவில் தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நிலமைகள் தொடர்பில் உரிய பதில் வழங்கத்தவறும் பட்சத்தில் வடக்கிலுள்ள சகல கூட்டமைப்பு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராடப்போவதாகவும் இவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like