இந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை சொல்ல வந்தால் நிகழும் அதிசயம் என்ன தெரியுமா?


அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

பொருள்: அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.

அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது. இத்துதியை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.