உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை!!

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை சில இடங்கள் முன்னணிக்கு வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்திரமான அபிவிருத்திக்கான் தீர்வு வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்கு அமைய முதல் 4 இடங்களில் ஸ்கன்டிநேவியன் நாடுகள் இருக்கின்றன.இறுதி 5 இடங்களில் ஆபிரிக்க நாடுகள் இருக்கின்றன. முதல் 5 இடங்களில் பின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இலங்கை 116ஆவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கை நான்கு இடங்கள் முன்னோக்கி வந்துள்ளது.அதேவேளை இந்தியா 133வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தியா 123வது இடத்தில் இருந்துள்ளது.

156 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் அதிக முன்னேற்றமடைந்த நாடாக டோகா கணிக்கப்பட்டுள்ளது.அந்த நாடு 17 இடங்கள் முன்னோக்கி சென்றுள்ளது. வெனிசூலா 20 இடங்கள் பின்நோக்கி சென்றுள்ளது. ஆபிரிக்காவின் புருண்டி 156 இடத்தில் உள்ளது.