பந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்!!

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிற்கு கலாநிதி பட்டம் வழங்கப்படவிருக்கின்றது.

சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றினால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.சீனாவின் பெய்ஜிங் வெளிநாட்டு கற்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜீ ஆ வென் ஜீயெனின் தலைமையில் இன்று இந்த கலாலநிதி பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வணிக தொடர்புகள் குறித்து பந்துல குணவர்தன சமர்ப்பித்த ஆய்விற்காக இந்த கலாநிதி பட்டம் வழங்கப்படுகின்றது.

இதேவேளை, 2013ஆம் ஆண்டில் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.கலாநிதி பட்டம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.