கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள்

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

3 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுடன் குறித்த வகுப்பறைகள் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தமது கற்றல் தேவைகளிற்காக இணையத்தில் தேடுதலை தாமாகவே மேற்கொண்டு கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வின்போது, அமைச்சின் செயலாளர் சிவஞானமூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.