பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது.

இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், உடனடியாக அந்த தடை நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

On my instructions, my secretary has discussed with officials of Facebook, who have agreed that its platform will not be used for spreading hate speech and inciting violence. As such, I instructed TRCSL to remove the temporary ban on Facebook with immediate effect.

— Maithripala Sirisena (@MaithripalaS) March 15, 2018