பொய்யான தகவல்களை பரப்பிய மாணவன் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்டு, இன கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்த நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லால் பண்டார உத்தரவிட்டார்.

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இனங்களுக்கிடையில், குழப்பங்களை உருவாக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டிலேயே குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டார்.