புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்த பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் . (காணொளி)

தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

புங்குடுதீவுப் பிரதேசத்தில் இன்று அதிகாலை வளர்ப்பு மாடுகளை கடத்தும் முயர்ச்சியில் இனந்தெரியாதசிலர் ஈடுபட்டிருந்த வேளை ஊர்காவற்றுறை பொலிசாரினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், கடத்தப்பட்ட மாடுகளும் கைப்பற்றப்பட்டன.

மீட்கப்பட்ட மாடுகள் ஊர்காவற்றுறை பொலிஸ் பாதுகாப்பில் கட்டப்பட்டுள்ளன.

குறித்த மாடுகளின் உரிமையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மாடுகள் பிடிப்பவர்களை இனங்கண்டு உரிய தண்டணை வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like