பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“கண்டி மாவட்டத்தில் பரவிய வன்முறைகளை அடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கும் தினம் குறித்து அரசாங்கம் ஏன் இதுவரை தீர்மானங்களை எடுக்கவில்லை?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் முற்றாக பேஸ்புக்கை நீக்கியுள்ளன. இதற்கு சீனா சிறந்த உதாரணம்.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எமக்கும் உள்ளது. இது குறித்த மக்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.

நாட்டுக்கு நல்லதென்றால் பிரச்சினை இல்லை. நாட்டுக்கு பிரச்சினையாக இருக்குமாயின் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

தடைசெய்யப்படுவதை விட பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தலாம் எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.