பெற்ற குழந்தையை விற்றுவிட்டு நாடகமாடிய தாய் பொலிஸாரால் கைது!! கடத்தல் நாடகம் முடிவுக்கு!!

வவுனியா வைத்தியசாலையில் (09) நேற்றைய தினம் குழந்தை திருட்டுப்போனதாகதாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று காலை(10) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில்கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில்தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம்கொடுத்து விட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பி வந்துபார்த்த போது குழந்தையை கொடுத்த நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்றுவைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் குறித்த தாயார் முறைப்பாடுமேற்கொண்டிருந்தார்.குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45வயதுடையவர்என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4ஆவது ஆண் குழந்தை என்பதும்குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் குழந்தையை பெற்ற தாயாரே, தனது குழந்தையை விற்று விட்டு திருட்டுப் போய் விட்டதாக நாடகமாடியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளதுடன், குறித்தகுழந்தையின் தாயாரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன், குழந்தையை வாங்கியவர் எனசந்தேகிக்கப்படும் பெண்மணி ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன் இருவரையும்வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like