மகனை கொலை செய்துவிட்டு தாய் நடத்திய நாடகம்… முகம்சுழிக்க வைக்கும் காரணம்

தனது ஏழு வயது மகனை தாய் ஒருவர் கொலை செய்துவிட்டு, பொலிசாரிடம் மகனைக் காணவில்லை என்று பொய் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த தறி தொழிலாளி மணிகண்டன். இவருக்கு மைனாவதி என்று மனைவியும் சசிகுமார் என்ற 7 வயது மகனும் இருந்துள்ளனர்.

கடந்த 5ம் திகதி பொலிசில் மைனாவதி தனது மகனைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மைனாவதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது புகாரில் எழுதப்பட்டிருந்ததும், அவர் கூறியதும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். இறுதியில் பொய்கூறி சமாளிக்க முடியாத மைனாவதி அனைத்து உண்மையையும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, தனது கணவரின் நண்பரான தியாகராஜன் தனது வீட்டிற்கு வருகையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தவறான உறவு ஏற்பட்டது.

Image result for மகனை கொலை  

எங்களது இந்த உறவிற்கு மகன் இடையூறாக இருப்பான் என்று அவனை இரவு நேரத்தில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் அவர் அடையாளம் காட்டிய கிணற்றிலிருந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சிறுவன் சசிகுமாரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பொலிசார். தாயே, பெற்ற மகனை கொலை செய்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மைனாவதியை கைது செய்த பொலிசார் அவரது கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like