2020ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள், தனியார் கல்வி நிறுவன வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைகள் சட்டத்தின் கீழ் அனுமான வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
மீறுபவர்கள் தொடர்பில் பொலிஸ் அல்லது பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வரும் மார்ச் 1 முதல் மார்ச் 10ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.