எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் எரிபொருள் விலையை சர்வதேச சந்தைக்கு பொருத்தமான முறையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலையையும், செப்டெம்பர் மாதத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது இலங்கை தொடர்பில் செயற்படுத்தும் கடன் வேலைத்திட்டத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கு முன்னர் இந்த திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பிற்கு வருகைத்தந்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த யோசனையை செயற்படுத்திய பின்னர், இலங்கைக்கு 165 மில்லியன் டொலர் கடன் விடுவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.