இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவத்தினர், இந்த தொலைகாட்சி அலைவரிசை கோபுரத்தையும் கைப்பற்றியிருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் குறித்த அலைவரிசை கோபுரம் தற்போதும் இயங்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like