மக்கள் நம்பிக்கை வைத்தாலேயே இனவாதம் ஒழியும்

நாட்டின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை இருக்க வேண்டுமெனவும், அரசியல் தலைவர்கள் மீதும் பொலிஸார், இராணும் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு என்பவற்றிலும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும், அப்போதே சமாதானத்தைச் சாத்தியமாக்கி, இனமோதல்களைத் தவிர்க்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கண்டி பிரதேசங்களில் பொதுவாக நோக்கும் போது சுமுகமான சூழ்நிலையொன்று உருவாகியிருக்கின்றது எனக் கூறலாம். ஆங்காங்கே சில சிறிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இருப்பினும், நாளையும் நாளை மறுதினமும் இந்த நிலைமையை முழுமையாக சீராக்கலாம் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

Image result for லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க

Get real time updates directly on you device, subscribe now.

You might also like