யாழில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார்.

குறித்த பொலிஸ் அதிகாரி வக்கிரமான ஆசைகள் கொண்டிருந்த நபர் என உயிரிழந்த பெண்ணின் தாய் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் குறித்த தாயார் கருத்து வெளியிடும் போது,

“கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த பொலிஸ் அதிகாரிக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவர் அவரை சித்திரவதை செய்ய ஆரம்பித்து விட்டார்.

அச்சுறுத்தல் விடுத்து என்னிடம் பேசுவதற்கு தடைவிதித்துள்ளார். எனது மகளுக்கு என்னிடம் பேச சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இரகசியமான வட்ஸ்அப் ஊடாக அழைத்த மகள், இவருடன் வாழ முடியவில்லை என்னை மிகவும் மோசமான முறையில் கொடுமைப்படுத்துகின்றார் என கூறினார்.

தற்கொலை செய்துக் கொள்வதற்கு 4 முறை முயற்சித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி மகள் நான்காவது முறை மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்துள்ளார்.

பலமுறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். எனினும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.