நாளை முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையினை முறையாக முன்னெடுத்து செல்வதன் ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக அந்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.அது தொடர்பான சுற்றுநிருபம் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






