சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்கு திரும்பும்! ஹர்ஷா டி சில்வா

நாட்டில் முடக்கப்பட்டுள்ள சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களின் உண்மையான பின்னணி என்னவென்பதை கண்டறிய உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்கள் தொடர்பில், சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் காரணமாக சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள்கொண்டு வரமுடிந்தது. இருந்தும் இந்த சம்பவங்கள் தூண்டுதலில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் சிங்கள இனவாத அமைப்புகளும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் உள்ளன. அகவே, இது குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

இதன் ஊடாக இரண்டு தரப்பின் தவறுகளையும் தண்டிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.