சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மைத்திரி, ரணில்!

நாட்டில் விதிக்கப்பட்ட உத்தரவினை மீறி உயர்மட்ட அரசியல் தலைவர்கள் செயற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பேஸ்புக் பக்கங்கள் வழக்கம் போன்று செயற்பட்டு வருவதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினத்தில் இருந்து சமூக வலைத்தளங்களுக்கான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கணக்கு இயங்குவதாகவும், நேற்று அந்த கணக்கு இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

எப்படியிருப்பினும் நாட்டில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்ட போதிலும் மாற்று முறையினை பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்களை பெருமளவிலானோர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சட்ட விதிமுறைகளை மீறி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துறைசார் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

s