கண்டியில் 20 பெற்றொல் குண்டுகள் பொலிஸாரால் மீட்பு

கண்டியில் கடந்த 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதலில் 20 பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதுடன், கண்டி நகர வீதிகளில் பொது மக்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் வன்முறையாளர்களின் தாக்குதல்களால் சேதமடைந்த வணிக நிலையங்கள் மற்றும் உடமைகளைச் சீர் செய்யும் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, உயிர்ச் சேதம் மற்றும் உடமைகள் சேதம் தொடர்பில் மதிப்பீடுகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like