செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

கொக்குவில் சந்தியில் உள்ள பெயின்ற் கடையின் மீது வாகனத்தில் வந்த சிலர் கடைகளை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தி விட்டு தப்பியோடியமை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களை வர்த்தக நிலையத்தினர் அச்சுறுத்தி உடமைகளையும் சேதப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிரிந்த உதயன் மற்றும் டான் , சக்தி நிறுவனப் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு புகைப்படம் ஒளிப்படம் எடுத்த கருவிகளிம் பறித்து வீதியில் அடித்து நொருக்கினர்.

இதன் காரணமாக செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதேநேரம் இதே வர்த்தக நிலையம்மீது கடந்த ஆண்டும் இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.

இருந்தபோதும் குறித்த வர்த்தக நிலையத்தில் நின்ற அதிக இளைஞர்கள் அனைவரும் இறுதிவரை ஊடகவியலாளர்களை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like