நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தனது 21-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் அவரின் மகள் ஜான்வி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தனது குடும்பத்தாருடன் கேக் வெட்டி ஜான்வி தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், தாய் இறந்த சில நாட்களில் இப்படி மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடலாமா என ரசிகர்கள் ஜான்வியை விமர்சித்துள்ளனர்.
Credit:Getty
ஒரு ரசிகர் தனது பதிவில், ஸ்ரீதேவி இறந்த துக்கத்திலிருந்து நானே இன்னும் மீளவில்லை, இத்தனைக்கும் நான் அவருக்கு உறவு கிடையாது.
ஆனால் அவர் அம்மா சடலத்தை எரித்த சில நாட்களில் எப்படி உங்களால் பிறந்தநாளை கொண்டாட முடிகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்னொருவர் கூறுகையில், அம்மா இறந்த ஒரு வாரத்தில் மகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
இது போல பலர் ஜான்வியை விமர்சித்து வந்தாலும், பலரும் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.







