கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி

இந்தியாவில் கணவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரின் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் ரவுர்கிலா நகரை சேர்ந்தவர் மனஞ்சாய் சவ்பி. இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற தனது தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்ள மனஞ்சாய் மட்டும் சென்றுள்ளார்.

திருமண வீட்டை அடைந்தவுடன் மனைவிக்கு அவர் போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை.

பின்னர் மூன்று நாட்களுக்கு பின்னர் மனைவியின் தாய் வீட்டுக்கு மனஞ்சாய் போன் செய்து மனைவி குறித்து கேட்டார்.

அப்போது, பேசிய மனஞ்சாய் மனைவியின் அம்மா, தனது மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மனஞ்சாய் தனது சொந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை அந்த பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like