இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாகச் சந்தித்த மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலேயே, இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார்.

எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like