யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.

நேற்று வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பி மார்க்ஸ், வடக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே, நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலையை யாழ்ப்பாண நகரத்தில் நிறுவன, தென்னாபிரிக்கத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார்.

அதற்கு, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இணக்கம் தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலா உலக அமைதியின் சின்னமாக விளங்குபவர் என்றும், அதனால் அவரது சிலையை யாழ்ப்பாணத்தில் நிறுவ தென்னாபிரிக்க தூதுவர் முன்வந்ததும், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும், வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like