உங்கள் முடி சொரசொரன்னு வறன்டு இருக்கா? இதை எப்படி சரி செய்யலாம்?

பொதுவாக நம்மில் சில பெண்களுக்கு கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் தான்.

இவை எல்லாம் சேர்ந்து கூந்தலில் வறட்சி தன்மையை ஏற்படுத்துகின்றது. இதற்கு சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நாளாடைவில் இது வேறு கூந்தல் பிரச்சினையை உருவாக்கிவிடும். எனவே சேதமான முடியை மீண்டும் சேதத்திலிருந்து மீட்க விரும்பினால் முதலில் கூந்தலுக்கு தேவை ஈரப்பதம் தான்.

அதை சரியான முறையில் ஈரப்பதமாக்குவதை நீங்கள் அறிந்துவைத்திருக்க வேண்டும். அந்தவகையில் உங்கள் கூந்தலை ஈரப்பதமாக்கும் முறைகள் குறித்து தற்போது இங்கு பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்

தேவையான அளவு தேங்காயெண்ணெயை எடுத்து கூந்தல் முழுக்க உச்சந்தலை, மயிர்க்கால்கள், முடி நுனிபகுதி என எல்லா இடங்களிலும் தடவி ஒருமணி நேரம் வரை ஊறவிடுங்கள்.

பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு தலைக்கு குளித்து உடன் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். வாரத்துக்கு 2 முறையாவது இதை செய்துவந்தால் வறட்சியான முடி வறட்சி குறைந்து இருக்கும்.

வாழைப்பழம்

1 பழுத்த வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் 1 அல்லது 2 டீஸ்பூன் இரண்டையும் ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக மசித்து அதை உச்சந்தலையில் தடவி விடவும்.

இதை 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வார்த்துக்கு ஒருமுறை இதை செய்தாலே போதும். கூந்தல் வறட்சியாகாமல் தடுக்க செய்யலாம்.

ஹியா பட்டர்

ஹியா பட்டர் 2 டீஸ்பூன் அல்லது உங்கள் கூந்தலின் அளவுக்கேற்ப எடுத்து கொள்ளவும். இதை இலேசாக சூடாக்கி உச்சந்தலையையும் முடியையும் மெதுவாக மசாஜ் செய்யவும்.

இதை அரை மணீ நேரம் முதல் ஒரு மணீ நேரம் வரை வைத்திருந்து பிறகு இலேசான ஷாம்பு கொண்டு கூந்தலை சுத்தம் செய்தால் போதும்.

பிறகு வழக்கம் போல் கண்டிஷனர் பயன்படுத்தி வந்தால் போதும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்துவந்தால் கூந்தல் வறட்சியிலிருந்து தப்பிக்கலாம்.

ஆலிவ் எண்ணெய்

1 முட்டையை அப்படியே மஞ்சள் கருவோடு சேர்த்து அல்லது வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

இதை உச்சந்தலையிலும் மயிர்க்கால்களிலும் நுனிகளிலும் தடவி ஹேர் கவர் போட்டு விடவும். பிறகு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு சுத்தப்படுத்துங்கள். கண்டிஷனர் பயன்படுத்துங்கள். வாரம் ஒரு முறை இதை செய்யலாம்.

தேன்

ஒரு டீஸ்பூன் பூசணி விதையுடன் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் தேங்காயெண்ணெய் சேர்த்து இரண்டையும் கலந்து விடவும்.

கூந்தல் ஈரப்பதம் ஆகும் வரை இதை தடவி விரல்களால் தலையை நன்றாக சொரிந்து பிறகு 20 நிமிடங்கள் கழித்து அதை விட்டு விட வேண்டும்.

பிறகுகண்டிஷனரை பயன்படுத்தவும். கூந்தலின் வறட்சி குறையும் வரை இதை செய்யலாம்.

கற்றாழை

கற்றாழையின் உள்ளிருக்கும் நுங்குபகுதியில் கால் கப் கற்றாழை ஜெல், தண்ணீர் – 1 கப், லாவெண்டர் எண்ணெயில் – 2 அல்லது 3 சொட்டுகள் சேர்த்து நன்றாக கலந்து மூன்றையும் ப்ளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.

இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உச்சந்தலையில் தலைமுடியில் அவ்வபோது தெளிக்கவும். இதை தினமும் கூட செய்து வரலாம்.

தினசரி தலை சீவுவதற்கு முன்பு இதை ஸ்ப்ரே செய்து கொண்டாலே வறட்சி அதிகமாகாமல் தடுக்கலாம். அவ்வபோது தயாரித்து பயன்படுத்தலாம்.