கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

கண்டி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிக்கு 3130 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினரை மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் நியமித்துள்ளார்.

அத்துடன் அவரது உதவிக்கு மேஜர் ஜெனரால் நிஷ்ஷங்க ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த குழுவில் 2500 இராணுவத்தினர், 600 கடற்படையினர் மற்றும் 30 விமான படையினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ தளபதி நேரடியாக கண்காணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3130 soldiers in Kandy Security intensity
கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like