ரணில் வகித்த அமைச்சர் பதவியை பறித்தார் சிறிசேன! இந்திய ஊடகம்!

இலங்கையில் சட்டம் ,ஒழுங்கு இலாகாவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிரு்நது பறித்தார் அதிபர் சிறிசேன. இவ்வாறு தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் கண்டியில் கடந்த வாரம் சிங்களம் மற்றும் மற்றொரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனால் இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தை ஓடுக்க மேற்கொண்ட நடவடிக்கை திருப்தியில்லாத நிலையில் அதிருப்தியடைந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் இருந்த சட்டம் ஒழுங்கு பொறுப்பை பறித்தார். .

தற்போது சட்டம்,ஒழுங்கு இலாகாவை ரஞ்சித் மத்தும பண்டாராவிடம் கொடுக்கப்பட்டது.

முன்னதாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு இலாகா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கடந்த வாரம் வழங்கினார்.

தாம் வகித்த 11 நாள் அமைச்சர் பதவியை இழந்தார் ரணில் விக்ரமசிங்கே. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like