கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து காணொளி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#WATCH: Members of Buddhist community hold protest outside Police station in #Kandy, Sri Lanka, demanding the release of Buddhists those who were arrested in the riot. pic.twitter.com/NVqJwcTtyn

— ANI (@ANI) March 6, 2018

Get real time updates directly on you device, subscribe now.

You might also like