நடுக் கடலில் பற்றி எரிந்த பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பல்!! மாலுமிகளின் கதி என்ன?

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கப்பலில் தீவிபத்து ஏறபட்டதாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் வீணானதாக குறித்த கப்பல் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் கப்பலை மீட்பது கடினம் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.கப்பலில் கொண்டு செல்லப்பட்ட சரக்கு பெட்டகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே மொத்த கப்பலுக்கும் வியாபித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் 13 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.விபத்தின் போது சுற்றுவட்டாரத்தில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அவர்கள் எந்த பதிலும் தரவில்லை எனவும் விபத்துக்குள்ளான கப்பல் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like