நீர்கொழும்பில் பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், தகாத தொழிலில் ஈடுபட்டுவந்த 24 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில், இயங்கி வந்த இவ் விடுதிகளுக்கு தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதிகள், மசாஜ் நிலைய பயிற்சியாளர்கள் என்ற பெயரில் செயற்பட்டு வந்துதுள்ளனர்.
குறித்த வியாபார விடுதிகள், வெல்லாவிடிய, குடாப்படுவ, பெரியமுல்ல மற்றும் எலபர பகுதிகளில் இயங்கிவந்துள்ளன.
ஆயுள்வேத மசாஜ் நிலையத்தில் பறிற்சியாளர் தேவையென்ற பத்திரிகை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு, பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி 20-28 வயத்திற்கிடைப்பட்ட யுவதிகள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான யுவதிகள் நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த நிலையில் அவர்களில் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களுக்கு தலா ரூபா .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் குற்றசாட்டு ஏற்றுக்கொள்ளாத யுவதிகள் தலா 500.000 பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.