மங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது.
மேஷ ராசியில் சூரியன், சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ள நேரத்தில் பிறக்கிறது பிலவ வருட தமிழ் புத்தாண்டு.
மேஷ ராசி மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதம். நிறைய அதிர்ஷ்டங்கள் நடைபெறும். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். சுக்கிர திசை நடப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. யோகங்கள் நடைபெறும்.
ரிஷப ராசியில் ராகு சுக்கிரன் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் யோகம் நடைபெறும். சகோதர ஸ்தானாதிபதி செவ்வாய் மிதுன ராசியில் பயணிப்பதால் சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புது வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
புத்திர தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நோய்கள் படிப்படியாக குறையும். நிறைய பேருக்கு திருமணம் நடைபெறும். கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் நீங்கும். எட்டாம் வீட்டில் ராகு பயணம் செய்வதால்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பிலவ ஆண்டில் குரு பகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் சஞ்சரிக்கிறார். ராகு கேது பெயர்ச்சியும் பிலவ ஆண்டு இறுதியில் நிகழ்கிறது. மகர ராசியில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளமடையும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். வேண்டுதல்கள் அதிகரிக்கும் கடவுள் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்.
பிலவ ஆண்டு எப்படி இருக்கும்? அசுர வேகத்தில் காத்திருக்கும் ஆபத்து!
அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார்.
பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா:
“பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்
சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்”
இந்தப் பாடலுக்கான விளக்கம்…
பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என்று வெண்பா கூறுகிறது.
நோய் பாதிப்பு
வெண்பாவை படித்து பயப்பட வேண்டாம் பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.
சுப காரியம் நடைபெறும்
பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.
பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும். நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும்.