இலங்கையில் உருவான தனிநாடு; வெளியான தகவல்

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்லேயே அவர் இதனை கூறினார்.

அத்துடன் நாடாளுமன்றம் நிறைவேற்றிய 25 சட்டமூலங்கள் கூட துறைமுக நகரத்தில் செல்லாது என்று அவர் கூறினார்.

அதன்படி, இது ஒரு தனி நாடு, ஆகும். இலங்கை மத்திய வங்கி, நாணய சபை மற்றும் பொது நிதியைக் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சகம் ஆகியவை துறைமுக நகர பணிப்பாளர் குழுவில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, துறைமுக நகரத்தை கட்டுப்படுத்தும் குழுவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது என்பது தெளிவாகிறதாக குறிப்பிட்ட அவர், எனினும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற விவாதம் கோரப்படும் என்றும் அதன் மூலம் உண்மைகள் நாட்டிற்கு வெளிப்படும் என்றும் இதன்போது மேலும் தெரிவித்தார்.