அதிகாரமற்ற வடக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மணிவண்ணன் கைது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளரை நியமிப்பதில் இரு பெரும் பிரிவுகளாகப் முரண்பட்டுள்ளனர். இதில் மாவை அணி, சுமந்திரன் அணி அடங்கும்.
சுமந்திரன் பொது வேட்பாளராக மணிவண்ணனை நிறுத்துவது குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் ஒரு செய்தியும் உண்டு. அத்துடன் நேற்று டக்ளஸ் விரைந்து செயற்பட்ட வேகம்.
மணிவண்ணன் வெளியே வந்தபின்னர் சுமந்திரன் இங்கு 25க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஒன்று கூடி இருப்பதாக கூறுகிறார்.
கடந்த 9 மாதங்களில் 28 ற்கு மேற்பட்ட தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது ஏன் இவ்வாறு 25 ற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுபட்டு ஒரு குழுவாக சிந்திக்கவில்லை. எங்கே போனார்கள் இந்த 25 சட்டத்தரணிகளும் ? கைது செய்யப்பட்டவர் ஒரு பிரமுகர் சட்டத்தரணி என்பதால் இவ்வளவு முக்கியத்துவம் அதேவேளை நீதிக்கு மாறாக கைது செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக யார் வருவார்கள்?
பயங்கர வாத தடைச்சட்ட வரலாற்றில் கைது செய்யப்பட்ட ஒருவர் சாதாரண சட்டத்திற்கு மாற்றப்பட்ட முதல் தடவை இதுவாகும் அத்தடன் கூட்டமைப்பின் முக்கிய அரசியல் வாதிக்கு உயிர் அச்சுறுத்தல் என கைது செய்யப்பட்ட 32 தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய இப்படி சட்டத்தரணிகளை திரட்டி போராடுவாரா சட்டத்தரணி ஐயா…..
அதாவது வடிவேலு மொழியில் கூறினால் உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
இப்படியாக கதைகள் யாழ் குடா நாடு எங்கும் உலாவுகின்றன, வெளியில் தெரியாமல் இரகசியமாக அரசியல் கைதிகளை ஒரு சட்டத்தரணி சட்ட திட்டங்களைச் செய்வதாக அரசியல் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார், இதில் என்ன காமடி என்றால் குறித்த சட்டத்தரணி 42வருட கால பயங்கரவாத தடைச்சட்ட வரலாற்றில் ஒரு வழக்கும் ஆஜராகாத ஒருவர்.
இப்படி பிழையான வரலாறு கூறி தமிழ் இனம் அழிந்து விட்டது, ஓரளவு ஆறுதலான தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இந்த ஐந்து வருடங்களுக்குள் அழித்து முகநுால் போராளிகளிடம் தமிழ் இனத்தின் எதிர்காலம், அவற்றுடன் இனம் முழுமையாக மறைந்து விடும் இது தான் கள நிலை.
மூன்று மொழி தொரிந்தவனால் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாது மாறாக அழிக்கத்தான் முடியும். இன விடுதலைக்கு மொழி ஒரு அடிப்படைத் தேவை அல்ல வெகு விரைவில் குஸ்புவிற்கு தமிழகத்தில் கோயில் உள்ளது போல வடக்கு – கிழக்கில் மூன்று மொழி தெரிந்த போலித் தமிழ் தேசியவாதிகளிற்கும் கோயில் கட்டும் நிலை வந்தாலும் வரும் காரணம் அப்படித்தான் நிலமை உள்ளது தமிழ் தேசிய அரசியல்.