பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் இறந்தமைக்கு தமிழீழர் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நபர் ஒருவர் விடுதலைப்புலிகளின் சீருடையை அணிந்து கொண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன்னால் இந்த இரங்கலை தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான காணொளி வெளியாகி உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.