யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் பலி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி இன்றைய தினம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போதே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உறவினர்களுக்கு இடையிலான தகராறு வாய் தர்க்கமாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery