அழகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நிரஞ்சலி யசவர்த்தனவின் குடும்பம் சான்றாக திகழ்ந்தது.
கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைதாரியின் குண்டுத்தாக்குதலில் நிரஞ்சனியின் கணவரும் அழகிய இரு மகள்மாரும் மாண்டுபோயினர்.
இந்நிலையில் நோயில் விழுந்துநீயும் பாயில் படுத்திருந்தால் கோயில் தெய்வத்தை க் கூட்டிவந்து காத்திருப்பேன். வாயில் ஒரு வார்த்தை வருவதற்கு முன்னாலே மாயம் நடந்ததுவோ மையிருட்டுக் கவிந்ததுவோ என புலம்பித்திரியும் கைம்பெண்ணாக தாயாக நிரஞ்சலி யசவர்த்தனவைக் காணமுடிகின்றது.