அஜித்தை மருத்துவமனையில் வீடியோ எடுத்த பெண் தற்கொலை முயற்சி; காவல்நிலையத்தில் கதறல்!

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித் வீடியோ எடுத்ததாக பெண் பணியாளர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் எப்பொழுதுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார். பொது இடங்களுக்கு செல்லமாட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட ஓட்டு போட வந்த போது மாஸ்க் அணியாமல் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த வீடியோ வைரல் ஆனது.

அந்த வகையில் தற்போது, சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த பர்ஜானா(28). என்ற பெண் தனியார் மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

அப்போது, நடிகர் அஜித் கொரோனா பரிசோதனைக்காக வந்துள்ளார். இதைக்கண்ட அந்த பெண் தீவிர தல அஜித் ரசிகை என்பதால், ஆர்கோளாறு காரணமாக அஜித்தை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், இதை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் செல்போனை வாங்கி வைத்துள்ளனர். அதன் பின்பு எச்சரித்து, செல்போன் பர்ஜானாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எப்படியோ வீடியோ கசிந்து சமூக வளைத்தலங்களில் வெளியாகியுள்ளது.

இதனால், பலரும் நடிகர் அஜித்திற்கு கொரோனாவா? என கேள்வி எழுப்பிய நிலையில், பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவனையிடம் வேண்டுகோள் மீண்டும் பணியில் சேர்த்துள்ளனர். ஆனால், அவருக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

பின்னரும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பர்ஜானா மருத்துவமனை தரப்பிடமும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியிடமும் மன்னிப்பு கேட்டு முறையிட்டுள்ளார்.

இதன்பின்னர் அந்த பெண் வேறு பணிக்கு செல்லாலம் என முடிவு எடுத்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் லோன் காரணங்களை காட்டி பர்ஜானாவின் படிப்பு சான்றிதழ்களை கொடுக்க மறுத்து இழித்தடித்து வந்துள்ளது.

இதனால், கடந்த ஒராண்டாக பணிக்கு செல்ல முடியாதவர் வயதான தாய் தந்தையை கவணிக்க முடியாமல் இருந்துள்ளார்.

இதையறிந்த நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ், இதை அவரிடம் தெரிவிப்போம் என கூறியுள்ளார். ஆனால், முதலில் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக கூறிவிட்டு சுரேஷ்சந்திரா பிறகு முடியாது என்று மறுத்துள்ளார்.

இதனால், மனமுடைந்த பர்ஜானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பர்ஜானா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆர்வமிகுதியில் வீடியோ எடுத்ததாகவும் அதனால் தனது வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பாக்கவில்லை என்றும், அஜித்தின் கருணை கிடைக்கவேண்டும் எனவும் காத்துள்ளார்.