தமிழ்,சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 முதல் 19 ஆம் திகதி வரையிலான மூன்று நாள் காலப்பகுதியில், புதிதாக 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகவலை, அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய்ப் பிரிவு விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் அநுராதபுரம் நகரத்தை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில், அதிகமானோர் புதுவருட காலப்பகுதியில் வெளி மாகாணங்களிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளுக்கு சென்றமையும், அவர்கள் அப்பிரதேசங்களிலிருந்து அநுராபுரம் மாவட்டங்களுக்கு வந்தமையுமே பிரதான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன..
தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் 1,50-,200 இடைப்பட்டவர்களை, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் தெஜன சோமதிலக்கா மேலும் தெரிவித்தார்.
புது வருட காலத்தில்,சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் இந்தத் தொற்றுக்கள் அதிகரித்திருக்கலாமென்றும் மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளைக் கையாள்வதற்கு கடினமான சட்டதிட்டங்களை அமுல்படுத்தவும், சுகாதார விதிமுறைகளைப் புறக்கணித்து நடப்போருக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவது பற்றியும் மாவட்டத்தின் சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினருடன் ஆலோசித்து வருகின்றனர்.