யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் வழிமறிக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் தீமூட்டப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பகுதியில் இன்று மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

யாழ் நகரில் பணியாற்றி விட்டு, ஆனைக்கோட்டையின் 3ஆம் கட்டையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிய யுவதியை, மூன்று பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

திடீரென அவரை வழிமறிக்க முற்பட்ட போது, அவர் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, அருகிலுள்ள வீடொன்றிற்குள் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, யுவதியின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

மானிப்பாய் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.