வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு பிரவேகிக்க தடை?

நுவரெலியாவுக்கும், திருகோணமலைக்கும் வெளிமாட்டங்களைச் சேர்ந்தவர்கள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் நுவரெலியா வசந்த கால நிகழ்வுகளுக்கு அதிகளவிலானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு பல இடங்களிலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

இதனையடுத்தே , மேற்படி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.